சினிமா

பாகுபலி-2 ட்ரெய்லர் வெளியீடு எப்போது?

பாகுபலி-2 ட்ரெய்லர் வெளியீடு எப்போது?

webteam

சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பாகுபலி-2 படத்தின் ட்ரெய்லர் பிப்ரவரி மாதம் வெளியிடப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ராஜமவுலி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த பாகுபலி படத்தின் தொடர்ச்சியாக பாகுபலி-2 படம் தயாராகி வருகிறது. படம் வெளியானது முதல் ரசிகர்களின் மில்லியன் டாலர் கேள்வியான கட்டப்பா பாகுபலியை ஏன் கொன்றார் என்ற கேள்விக்கு இரண்டாம் பாகத்தில் விடை கிடைக்கும் என்பதால் ரசிகர்களிடையே பாகுபலி-2 படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறக்கிடக்கிறது. படப்பிடிப்பு வேலைகள் சமீபத்தில் முடிந்ததால், ட்ரெய்லர் இன்று வெளியிடப்படுவதாக இருந்தது. ஆனால், கிராபிக்ஸ் வேலைகள் அதிகம் இருப்பதால் பாகுபலி-2 படத்தின் ட்ரெய்லர் பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் என பெரும் நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்துள்ள பாகுபலி-2 படம் ஏப்ரல் 28-ல் திரைக்கு வருகிறது.