சினிமா

மாலத்தீவின் அழகையே மிஞ்சும் காஜல் அகர்வாலின் பேரழகு புகைப்படங்கள்!

sharpana

சமீபத்தில் திருமணமான நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் மாலத்தீவில் தேனிலவு கொண்டாடிய புகைப்படங்கள் ’வாவ்’ ரகங்கள்.

நடிகை காஜல் அகர்வால் இயக்குநர் பேரரசுவின் 2008-ஆம் ஆண்டு வெளியான ‘பழனி’ படத்தில்தான் தமிழில் அறிமுகமானார். பொம்மலாட்டம், பழனி, மோதிவிளையாடு, நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, மெர்சல், ஆல் இன் ஆல் அழகு ராஜா, ஜில்லா, மாரி, விவேகம் என தமிழின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தற்போது, கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ விலும் நடித்து வருகிறார்.

இந்தி, தமிழ், தெலுங்கு என மும்மொழிகளில் நடித்து வந்தாலும் காஜல் அகர்வாலை முன்னணி நடிகையாக்கியது ராஜமெளலி இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ’மஹதீரா’ தான். இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.

அதிலிருந்து, தமிழ், தெலுங்கு ரசிகர்களின் ப்ரியமான நடிகையாக இருந்த காஜல் அகர்வாலுக்கு தற்போது 35 வயது ஆகிறது. இவரது திருமணம் எப்போது என்று திரையுலகமே ஆவலோடு எதிர்பார்த்திருந்த நிலையில், கடந்த 6 ஆம் தேதி சமூக வலைதளங்களில் தனது திருமணம் குறித்தும் காதலர் கெளதம் கிட்சிலு குறித்தும் முதன்முறையாக அறிவித்தார். அதனைத்தொடர்ந்து, ஒரு வாரம் முன்பு  மும்பை நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது. காதல் கணவர் கெளதம் கிட்சிலுவுடன் புதிய வீட்டில் குடியேறியுள்ள காஜல் அகர்வால், தற்போது தேனிலவு கொண்டாட மாலத்தீவுக்குச் சென்றுள்ளார்.

நீரால் சூழப்பட்ட தீவு சென்றாலே அழகுதான். அதில், மாலத்தீவின் அழகு என்பது மலைக்க வைக்கும் பேரழகு. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காஜல் அகர்வால் சிவப்பு நிற உடையில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் மாலத்தீவின் அழகை விட மனதை கொள்ளைக் கொள்கிறது.