Avengers: Doomsday Robert Downey Jr.
சினிமா

'நமஸ்தே இந்தியா..' Avengers: Dooms Day நட்சத்திரங்கள் கொடுத்த தீபாவளி சர்ப்ரைஸ்!

அந்தோணி ரூஸோ மற்றும் ஜோ ரூஸோ இயக்கும் இப்படத்தில், மார்வெல் உலகின் பல முக்கிய கதாபாத்திரங்கள் இணைந்து புதிய ஆபத்தை எதிர்கொள்கின்றன.

PT WEB

செய்தியாளர் - M.மீரா

மார்வெல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம், அமெரிக்காவுக்கு ஒருநாள் முன்னதாக இந்தியாவில் வெளியாகவுள்ளது. இதன்படி, வரும் டிசம்பர் 17-ஆம் தேதி இந்தியத் திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை ஹாலிவுட் நடிகர்கள் ராபர்ட் டவுனி ஜூனியர் மற்றும் கிறிஸ் எவன்ஸ் ஆகியோர் 'இந்திய ரசிகர்களுக்கான சிறப்பு வீடியோ நமஸ்தே இந்தியா' என்று கூறி தீபாவளி வாழ்த்துகளை கூறினர்.

தீபாவளி என்பது ஓர் அத்தியாயம் முடிந்து, புதிய அத்தியாயம் தொடங்குவதைக் குறிக்கிறது என்றும், இதற்கும் படத்தின் கதைக்கும் தொடர்பு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அந்தோணி ரூஸோ மற்றும் ஜோ ரூஸோ இயக்கும் இப்படத்தில், மார்வெல் உலகின் பல முக்கிய கதாபாத்திரங்கள் இணைந்து புதிய ஆபத்தை எதிர்கொள்கின்றன. இதில் ராபர்ட் டவுனி ஜூனியர், அயர்ன் மேன் கதாபாத்திரத்துக்குப் பதிலாக வில்லனான டாக்டர் டூமாக நடிக்கிறார். கிறிஸ் எவன்ஸ் மீண்டும் ஸ்டீவ் ரோஜர்ஸ் என்ற கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.