சினிமா

22 சூப்பர் ஹீரோக்களும் ஒரு கொடூர வில்லனும்!

22 சூப்பர் ஹீரோக்களும் ஒரு கொடூர வில்லனும்!

webteam

22 சூப்பர் ஹீரோக்கள், ஒரு வில்லனோடு மோதும் ’அவஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்’ படம் ஏப்ரல் 27 ஆம் தேதி வெளியாகிறது.

மார்வல் காமிக்ஸ் மூலம் திரைக்கு வந்த அனைத்து சூப்பர் ஹீரோக்களுக்கும் தனி வரவேற்பு இருக்கிறது. அனைத்து சூப்பர் ஹீரோக்களையும் இணைத்து நம்மை மகிழ்விக்கும் வகையிலான படைப்பை கொடுப்பதில் அவஞ்சர்ஸ்-க்கு முக்கிய பங்கு உண்டு. இதற்கு முன் 2012-ல் வெளியான ’அவஞ்சர்ஸு’ம் அதன் இரண்டாம் பாகமான, ’அவஞ்சர்ஸ் அல்ட்ரானும்’ (2015) ஏற்கனவே வெற்றிபெற்றுள்ளன. இதன் மூன்றாம் பாகம் ’அவஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்’ என்ற பெயரில் இப்போது உருவாகி இருக்கிறது. 22 சூப்பர் ஹீரோக்கள், ஒரு கொடூர வில்லனோடு மோதும் வகையில் கதை உருவாக்கப்பட்டுள்ளது. 

ரூசோ சகோதர்களான, அந்தோணி ரூசோ மற்றும் ஜோ ரூசோ இயக்கியுள்ள இந்தப் படத்தில் பெரும் நட்சத்திரப்பட்டாளமே நடித்துள்ளது.தமிழ், தெலுங்கு, இந்தியில் டப் ஆகி வெளிவரும் இந்தப் படம் ஏப்ரல் மாதம் 27-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. 

தெலுங்கு பதிப்பில்  வில்லன் கேரக்டரான தாநோஸ்-க்கு ’பாகுபலி’ ரானா டப்பிங் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.