Avatar2 Avatar: The Way of Water
சினிமா

ரீ ரிலீஸ் ஆகும் ஜேம்ஸ் கேமரூனின் `Avatar: The Way of Water' | James Cameron

Avatar: The Way of Water சிறந்த விஷூவல் எஃபெக்ட்ஸூக்காக ஆஸ்கர் விருது வென்று உலகளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

Johnson

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகி 2009ல் வெளியான படம் `Avatar'. அந்தப் படம் வெளியான சமயத்திலேயே, Avatarக்கு இன்னும் நான்கு பாகங்கள் வரும் என அறிவித்தார் கேமரூன். அதன்படி அவதாரின் இரண்டாம் பாகமான `Avatar: The Way of Water' 2022ல் வெளியானது. தொடர்ந்து மூன்றாவது பாகமான `Avatar: Fire and Ash' டிசம்பர் 19ம் தேதி வெளியாக இருக்கிறது. அதற்கு முன்பாக அவதார் இரண்டாம் பாகம் Avatar: The Way of Water படத்தை ரீ ரிலீஸ் செய்கின்றனர்.  

Oscar

Avatar: The Way of Water திரைப்படம் இந்தியாவில் அதிக வசூல் செய்த ஹாலிவுட் திரைப்படம் என்ற சாதனை படைத்தது. மேலும் சிறந்த விஷூவல் எஃபெக்ட்ஸூக்காக ஆஸ்கர் விருது வென்று உலகளவிலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. சாம் வொர்திங்டன், ஜோ சல்டானா நடித்த இந்தப் படத்தில் சிகோர்னி வீவர், கேட் வின்ஸ்லெட் மற்றும் ஸ்டீபன் லாங் ஆகியோரும் நடித்திருந்தனர். ஜேம்ஸ் கேமரூன் பிரமிக்க வைக்கும் காட்சியும், நீருக்கடியிலும் நிலப்பரப்பின் மேலும் பல சாகசங்களை படத்தில் செய்திருந்தார்.

தற்போது மீண்டும் ஒருமுறை இப்படத்தை தியேட்டரில் கண்டுகளிக்க வாய்ப்பாக, Avatar: The Way of Water அக்டோபர் 3ம் தேதி வெளிநாடுகளில்  ரீ ரிலீஸ் ஆக உள்ளது. அதற்கு ஒரு நாள் முன்பாக இந்தியாவில் அக்டோபர் 2ம் தேதி வெளியாகிறது.