கன்னட படத் தயாரிப்பாளர் மீது பாலியல் வழக்கு தொடர்ந்திருந்த நடிகை அவந்திகா ஷெட்டி அந்த வழக்கை வாபஸ் பெற்றுள்ளார்.
'ராஜூ கன்னட மீடியம்' என்ற படத்தில் நடித்து வந்தவர் அவந்திகா ஷெட்டி. இந்தப் படத்தை தயாரித்தவர் சுரேஷ். படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் திடீரென்று அவந்திகா ஷெட்டி நீக்கப் பட்டார். படப்பிடிப்புக்குச் சரியாக வரவில்லை என்றும் தகராறு செய்கிறார் என்றும் இதற்கு காரணம் கூறப்பட்டது. ஆனால், இதை மறுத்த அவந்திகா, பட அதிபர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் தகராறில் ஈடுபட்டேன். அதை காரணமாக வைத்து என்னை நீக்கி விட்டார் என்று கூறினார். இது கன்னட சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து அவந்திகா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். கன்னடத் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இதில் தலையிட்டு இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தியது. பின்னர் அவந்திகா வழக்கை வாபஸ் பெற்றுள்ளார்.