சினிமா

அஜித் ரசிகராக அதர்வா நடிப்பது கைதட்டலுக்காக மட்டுமல்ல - இயக்குநர் ஸ்ரீகணேஷ்

அஜித் ரசிகராக அதர்வா நடிப்பது கைதட்டலுக்காக மட்டுமல்ல - இயக்குநர் ஸ்ரீகணேஷ்

webteam

'குருதி ஆட்டம்' திரைப்படத்தில் நாயகன் அதர்வா, அஜித் ரசிகராக நடிக்கிறார். 

தனது அறிமுக படத்திலேயே அனைவரின் கவனத்தை ஈர்த்து பாராட்டு பெற்றவர் இயக்குநர் ஸ்ரீகணேஷ். அவர் இயக்கிய 8 தோட்டாக்கள் படம் அனைத்து தரப்பிடமும் வரவேற்பை பெற்றது. தற்போது ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் உருவாகும் இரண்டாவது திரைப்படம் 'குருதி ஆட்டம்'. ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகும் இத்திரைப்படம் மதுரையைக் களமாகக் கொண்டு தயாராகி வருகிறது. இந்தப்படத்தில் மருத்துவமனை வார்டு பாய் கதாபாத்திரத்தில் அதர்வா நடித்து வருகிறார்.

ஆக்‌ஷன் அதிரடிகளுடன் படமாக்கப்பட்டு வரும் 'குருதி ஆட்டம்' படத்தில், அதர்வா அஜித் ரசிகராக நடித்து வருகிறார். இதற்காக, அவர் அஜித்துடன் ஒரு நிகழ்ச்சியில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். 

இதுகுறித்து தெரிவித்துள்ள படத்தின் இயக்குநர் ஸ்ரீகணேஷ், திரையரங்கில் வெறும் கைதட்டல்களைப் பெறுவதற்காக மட்டும் அதர்வா, அஜித் ரசிகராக தோன்றவில்லை எனவும், படம் பார்க்கும் ரசிகர்களுக்கு அதற்கான காரணம் தெரிய வரும் எனவும் கூறியிருக்கிறார். 

'குருதி ஆட்டம்' திரைப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ப்ரியா பவானிசங்கர் நடித்து வருகிறார்.