வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘அசுரன்’ திரைப்படம் அக்டோபர் 4-ஆம் தேதி திரைக்கு வருகிறது.
‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘வடசென்னை’ படங்களை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அசுரன்’. பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் மஞ்சு வாரியர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். எஸ்.தாணு படத்தை தயாரித்துள்ளார்.
இப்படத்தில் தனுஷ் தந்தை மற்றும் மகன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இப்படம் வரும் அக்டோபர் 4-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.