சினிமா

1450 கிலோமீட்டர் சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்கும் ஆர்யா!

1450 கிலோமீட்டர் சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்கும் ஆர்யா!

webteam

லண்டனில் நடைபெற உள்ள எல்இஎல்- 2017 எனப்படும் 1450 கிலோமீட்டர் தூரம்  கொண்ட சைக்கிள் பந்தயத்தில் நடிகர் ஆர்யா போட்டியாளராக பங்கேற்க இருக்கிறார்.

நடிகராக பிஸியாக வலம் வந்தாலும் விளையாட்டு, உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்துபவர் ஆர்யா. "லண்டன் ஈடன்பர்க் லண்டன் 2017" சைக்கிள் பந்தயம் ஐந்து நாட்கள் நடைபெற இருக்கிறது. 1450 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்தப் பந்தயத்தில் ஆர்யா விருப்பத்துடன் பங்கேற்கிறார். 

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நமது தலைவரின் வாழ்த்துகளுடன் பங்கேற்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார். அத்துடன் சூப்பர் ஸ்டார் ரஜினி, அக்‌ஷய்குமார், லைகா நிறுவனத்தின் ராஜூ மகாலிங்கம் ஆகியோருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். ஜூலை 30ம் தேதி நடைபெற உள்ள இந்த சைக்கிள் பந்தியத்தில் பங்கேற்கும் ஆர்யாவுக்கு ரஜினி நடித்துள்ள 2.0 படத்தின் சார்பாக லைகா நிறுவனம் ஸ்பான்சர் செய்துள்ளது.