நடிகர் ஜீவா- ஆர்யா இணையும் புதுப்படம் ஒன்றை லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் "2.0". இதனை உலக அளவில் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது அதன் தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ். இதனையடுத்து நடிகர் ஆர்யா, ஜீவா கூட்டணியில் லைக்கா புரொடக்ஷன்ஸ் புது படம் ஒன்றை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆர்யா படத்தில் ஜீவா கேமியோ ரோலிலும், ஜீவா படத்தில் ஆர்யா கேமியோ ரோலிலும் ஏற்கனவே தோன்றியிருக்கின்றனர். ஆனால் இருவர் இணைப்பிலும் முழு நீள படம் இதுவரை ஏதும் தயாராகவில்லை. " நான்", "எமன்" படத்தை இயக்கிய ஜீவா ஷங்கர் இப்படத்தை இயக்குகிறார். படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.