மணிரத்னத்தின் ‘கடல்’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ-எண்ட்ரி கொடுத்த அரவிந்த்சாமி ‘தனி ஒருவன்’ படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இப்போது நடிகர் அரவிந்த்சாமி இயக்குநராக அறிமுகமாக உள்ளார். அவரை நடிகராக அறிமுகப்படுத்திய இயக்குநர் மணிரத்னம் இந்தப் படத்தை தயாரிப்பது கூடுதல் சிறப்பு.
தற்போது 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்', 'சதுரங்க வேட்டை-2' போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார் அரவிந்த்சாமி. அவர் இயக்குனராக அறிமுகமாகவுள்ள திரைப்படத்துக்கான கதை விவாதத்திலும் ஈடுபட்டு வருகிறார். காதல் கதையாக உருவாக இருக்கும் இந்தப் படத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறாரா என்பது குறித்து உறுதியான தகவல் தெரியவில்லை.