அருள்நிதி நடித்து வரும் 'தேஜாவு' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
தேஜாவு என்று தலைப்பிட்டுள்ள அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கும் இந்த புதிய படத்தில் அருள்நிதி நடித்து வருகிறார். இதற்கான ஃபர்ஸ்ட் லுக்கை சமீபத்தில் வெளியிட்ட படக்குழுவினர் இறுதி கட்ட படப்பிடிப்பில் தீவிரம் காட்டி வந்தனர். இந்நிலையில் தேஜாவு படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதால் படத்தின் இறுதிகட்ட பணிகளை துரிதப்படுத்த படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.
இந்த படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் எடுக்கப்படுகிறது. தமிழில் அருள்நிதியும், தெலுங்கில் நவீன் சந்திரா என்பவரும் நடிக்கின்றனர். அதேபோல் தமிழில் அருள்நிதியுடன் ஸ்மிருதி வெங்கட், மைம் கோபி, காளி வெங்கட், மதுபாலா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.