சினிமா

லுங்கியில் மாஸ் காட்டும் விஜய் - பிகில் படத்தின் புது அப்டேட்!

லுங்கியில் மாஸ் காட்டும் விஜய் - பிகில் படத்தின் புது அப்டேட்!

webteam

பிகில் படத்தின் அடுத்த அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. 

விஜய் நடிக்கும் 63ஆவது திரைப்படத்திற்கு 'பிகில்' என தலைப்பிட்டுள்ளது. அவரது பிறந்தநாளையொட்டி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது. அதையடுத்து நள்ளிரவு 12 மணிக்கு பிகில் படத்தின் இரண்டாவது போஸ்டரும் வெளியிடப்பட்டது. இப்படத்தில் அவர் இரட்டை வேடத்தில் நடிப்பது போஸ்டர் மூலம் தெரியவந்துள்ளது. 

கால்பந்து வீரரா‌க காட்சியளிக்கும் விஜய்க்கு அருகில், நடுத்தர வயதான தோற்றத்தில் வேட்டியுடன் மற்றொரு விஜய் உள்ளார். இரண்டாவது போஸ்டரில் 4 விதமான தோற்றங்களில் விஜய் காட்சியளிக்கிறார். அட்லி இயக்கத்தில் தயாராகும் இப்படத்தில் நயன்தாரா, கதிர், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்ற‌னர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். படத்தின் தலைப்பிற்கு விஜயின் ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், இந்தப் படம் குறித்து ட்வீட் செய்திருந்த படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, “எதிர்பாராத ஒன்றை எதிர்பாருங்கள். வாழ்க்கை அற்புதமான தருணங்களால் நிறைந்தது. 6 மணிக்கு உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது” என்று தெரிவித்திருந்தார். 

அதன்படி, இன்று மாலை 6 மணியளவில் பிகில் படத்தில் மூன்றாவது போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் விஜய் கால்பந்து வீரர் டி சர்ட்டையும் லுங்கியையும் அணிந்து கொண்டு கையில் சைக்கிள் செயினை வைத்துக்கொண்டு மாஸாக நிற்கிறார். அவரின் டிசர்ட் பின்னால் மைக்கேல் என்று பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விஜயின் ஒரு கதாப்பாத்திரத்தின் பெயர் மைக்கேல் என்று தெரியவந்துள்ளது.