நடிகர் ஜெய்யை வைத்து நயன்தாரா இயக்குநர் புதிய படம் ஒன்றை இயக்க ஆரம்பித்திருக்கிறார்.
இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘அறம்’. இதில் நயன்தாரா நடித்திருந்தார். அப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனால் ‘அறம்2’ படத்தை இயக்குநர் இயக்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் அவர் நடிகர் ஜெய்யை வைத்து புதியதாக ஒரு படத்தை இயக்க ஆரம்பித்துள்ளார். அதன் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.
இதில் காமெடி நடிகர் டேனியல் நடித்து வருகிறார். இந்தப் படம் சம்பந்தமாக இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த விஷயத்தை பகிர்வதில் மகிழ்ச்சியைகிறேன். என் அடுத்த படத்தில் நடிகர் ஜெய்யுடன் மீண்டும் நடிக்கிறேன். இதனை ‘அறம்’ இயக்குநர் கோபி நயினார் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு நேற்று தொடங்கியுள்ளது. எனக்கு உங்களின் வாழ்த்து தேவை” என்று குறிப்பிட்டுள்ளார் டேனியல்.
ஆகவே ‘அறம்2’ படத்தை இயக்குநர் அடுத்த ஆண்டிற்கு தள்ளி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.