தனது இசைத்தொகுப்பு அதிகமாக விற்பனையாகி உள்ளதற்காக ரஹ்மான் தனது மகிழ்ச்சியை தெரிவித்திருக்கிறார்.
ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘பியாண்ட் தி க்ளவ்ட்ஸ்’. ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’, ‘தி கலர் ஆஃப் பாரடைஸ்’ என இவரது பல படங்கள் உலக அளவில் பேசப்பட்டவை. இந்தப் படம் ‘லண்டன் ஃபிலிம் ஃபெஸ்டிவலில்’ முதன்முதலாக கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. இப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் இசையமைத்திருந்தார். இந்தக் கதை இந்திய கலாச்சாரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டதால் அதன் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. மூன்று மொழிகளில் தயாராகியுள்ள இத்திரைப்படம் வரும் 20 தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் இந்தப் படத்தின் இசை ஆல்பத்தின் விற்பனை இந்திய அளவில் அமேசானில் முதல் இடத்தை பிடித்துள்ளது. அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கம் போல ‘எல்லா புகழும் இறைவனுக்கே’ என தெரிவித்துள்ளார்.