எப்படி படம் எடுக்க வேண்டும் என்பதை தன்னுடைய மொழியில் இயக்குநர் மணிரத்னம் சொல்லி தந்த அனுபவத்தை ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்து உள்ளார்.
இது குறித்து பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், “மணிரத்னம் ஒருமுறை என்னிடம் பேசிக்கொண்டிருந்தபோது, படம் எடுப்பது என்பது பாடலுக்கு இசையமைப்பது போன்றதுதான். உனக்கு அதற்கு ஒரு தொடக்கம், பாடலுக்கான தீம், டியூன் ஆகியவை தேவை. அதன் பின்னர் பின்னணி இசையை கோர்ப்பாய். இறுதியில் அது பாடலாக முழுவடிவம் பெறும் அந்த பயணமும் அழகாக முடியும் என்று பேசியதாக ரஹ்மான் கூறினார்.
அதனைத்தொடர்ந்து பேசிய அவர், “ கதை சொல்லலை என்னுடைய மொழியில் அவர் எனக்கு சொல்லி தந்தது, எனக்கு கதை சொல்லாடல் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது” என்றார்.
ஏ.ஆர்.ரஹ்மான் திரைக்கதை எழுதி, தயாரித்துள்ள '99 சாங்ஸ்' என்னும் திரைப்படம், இசை துறையில் சாதிக்க வேண்டும் என நினைக்கும் ஒரு இசை கலைஞரின் பயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதில் புதுமுக நடிகராக இஹான் என்பவர் அறிமுகமாகிறார். இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா அண்மையில் நடந்தது குறிப்பிடத்தக்கது.