ed sheeran facebook
சினிமா

Shape oF You புகழ் எட் சீரனுடன் இசைப்புயல் ரகுமான் சேர்ந்து கலக்கிய இசை நிகழ்ச்சி!

சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் எட் சீரனின் இசை நிகழ்ச்சி நேற்று (05.02.25) நடந்தது.

ஜெனிட்டா ரோஸ்லின்

ஷேப் ஆஃப் யூ, பாடல் மூலமாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மிகவும் பிரபலமான பாடகராக மாறியவர்தான் இங்கிலாந்து பாடகர் எட் ஷீரன்.

பாடகர் மட்டுமல்ல பாடலாசியராகவும் வலம் வரும் எட் ஷீரன், இங்கிலாந்தை சேர்ந்தவர். ஷேப் ஆஃப் யூ, பெர்ஃபெக்ட், திங்கிங் அவுட் லவுட் உள்ளிட்டவை இவரது ஹிட் பாடல்களாகும். 33 வயதாகும் இந்த பாடகர், சிறு வயதில் இருந்தே பெரிய இசை ஆர்வம் மிக்கவர். தனது 11 வயதிலிருந்தே முதல் பாடலையும் இவர் எழுத ஆரம்பித்துள்ளார்.

இப்படி இவரது பாடல்களுக்கு கிடைத்த பெரும் வரவேற்பால், பிரிட் விருதையும், பிரிட்டிஷ் பெஸ்ட் சோலோ சிங்கர் என்ற விருதையும் இவர் வென்றிருக்கிறார். இசையோடு மட்டுமல்லாது உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இசை நிகழ்ச்சியை நடத்திவருகிறார்.

இந்த சுற்றுப்பயணத்தில் ஹைதரபாத், டெல்லி, புனே, சென்னை, பெங்களூரு,ஷில்லாங்க ஆகிய நகரங்களில் தனது இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளார். பிப்ரவரி 15ஆம் தேதி வரை, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இவர் நிகழ்ச்சிகளை நடத்த இருக்கிறார். இதன் ஒரு பகுதியாக சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் எட் சீரனின் இசை நிகழ்ச்சி நேற்று (05.02.25) நடந்தது.

6 மணி நேரம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் ஒரு டிக்கெட்டின் விலை ரூ.3,000ல் ஆரம்பித்து, ரூ.24,000 வரை செல்கிறது. இதனால், சென்னையில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டது.

மேலும், இசை நிகழ்ச்சிக்கு ஒருநாள் முன்னர், இசைப்புயல் ஏஆர்ரகுமானை சந்தித்த இவர் அவரோடு எடுத்திருந்த புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார்.

இதனால், கான்செட்டில் ஏஆர்ரகுமானும் கலந்து கொள்வாறா? என்ற எதிர்ப்பார்ப்பு மக்களிடையே கூடியது. இதனை மெய்ப்பிக்கும் வகையில், எட் சீரனின் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஏஆர்ரகுமானும் கலந்துக்கொண்டார்.

எட் சீரன் ஷேப் ஆஃப் யூ பாடலையும் ரகுமான் ஊர்வசி பாடலையும் ரீமிக்ஸாக பாடினார். ஏஆர்ரகுமானை கண்ட ரசிகர்கள் ஆரவாரம் செய்து இவர்களுடன் சேர்ந்து பாடல்களை பாடி வைப் செய்தனர் . இது குறித்தான வீடியோவை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள எட் சீரன், “ Ed performing with @arrahman in Chennai” என்ற கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார்.

இந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.