சென்னையில் நடிகை ஸ்ரீதேவி நடத்திய விருந்து நிகழ்ச்சியில் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது மனைவியுடன் கலந்துகொண்டார்.
நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூருக்கு நேற்று முன் தினம் பிறந்த நாள். இவரது பிறந்த நாளை ஸ்ரீதேவி மற்றும் அவர் மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோர் அவர்களது சென்னை வீட்டில் கொண்டாட முடிவு செய்தனர்.
அதன்படி அவர்களது சென்னை வீட்டில் இந்த பார்ட்டி சனிக்கிழமைக் கொண்டாடப்பட்டது. இதில் ஏ.ஆர்.ரகுமான் தனது மனைவி சாயிராவுடன் கலந்துகொண்டார். வழக்கமாக இது போன்ற விழாக்களில் ரகுமான் கலந்துகொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தி நடிகை ஷபானா ஆஸ்மி, பிரபல பேஷன் டிசைனர் மனீஷ் மல்ஹோத்ரா, இயக்குனர் கவுரி ஷிண்டே உட்பட பல பாலிவுட் பிரபலங்களும் இதில் கலந்துகொண்டனர்.