சினிமா

பெப்சி கோக் விஷயத்தில் முந்திக்கொண்ட ஏ.ஆர்.முருகதாஸ்..!

பெப்சி கோக் விஷயத்தில் முந்திக்கொண்ட ஏ.ஆர்.முருகதாஸ்..!

Rasus

பெப்சி, கோக் குளிர்பானங்கள் குடிப்பதை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னதாகவே நிறுத்திவிட்டதாக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

கோலிவுட்டில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான படம் கத்தி. விவசாயிகள் பிரச்சினை மற்றும் குளிர்பான ஆலைகள் குறித்து இப்படம் விரிவாக அலசியது. படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் பலரும், கோக், பெப்சி உள்ளிட்ட அன்னிய நாட்டு குளிர்பானங்கள் பருகுவதை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதற்கு பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பெப்சி, கோக் குளிர்பானங்கள் குடிப்பதை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னதாகவே நிறுத்திவிட்டதாக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கத்தி படத்திற்கான கதையை எழுதும் போதே இத்தகைய முடிவை எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் தற்போது முதல் தனது படப்பிடிப்பு தளத்தில் பெப்சி மற்றும் கோக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்தாகவும் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.