சினிமா

ரஜினி படத்தை இயக்கும் ஏ.ஆர். முருகதாஸ்

ரஜினி படத்தை இயக்கும் ஏ.ஆர். முருகதாஸ்

webteam

ரஜினி நடிக்கும் படத்தை விரைவில் இயக்கப்போவதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

தற்போது ஸ்பைடர் படத்தின் விளம்பரப் பணிகளில் கலந்து கொண்டுவரும் அவர், சமீபத்தில் ரஜினிகாந்தை சந்தித்து கதை சொன்னதாகவும், அது ரஜினிக்கு பிடித்துவிட்டதாகவும் சொல்லியிருக்கிறார். அதனால், ரஜினியை இயக்க வேண்டும் எனும் தனது நீண்டநாள் கனவு விரைவில் நிறைவேறப் போவதாகவும் ஏ.ஆர். முருகதாஸ் கூறியிருக்கிறார். ஸ்பைடர் படத்தைத் தொடர்ந்து அவர், விஜய் நடிக்கும் படத்தை இயக்குகிறார். அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் தொடங்கவுள்ளது.