சினிமா

ஏ.ஆர். முருகதாஸின் அடுத்த அறிவிப்பு

ஏ.ஆர். முருகதாஸின் அடுத்த அறிவிப்பு

webteam

மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஸ்பைடர்’ படத்தின் டீசர் நாளை வெளியிடப்படும் என்று இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்துள்ள படம் ஸ்பைடர். இந்தப்படத்தின் டீசர் மகேஷ்பாபு பிறந்தநாளை முன்னிட்டு நாளை வெளியிடப்படும் என்று இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் லைகா நிறுவனத்தின் ராஜூ மகாலிங்கம் ஆகியோர் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்கள். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரம்மாண்டமாக தயாராகி வரும் ஸ்பைடர் படத்தில் மகேஷ் பாபு இதுவரை இல்லாத அளவுக்கு ஸ்டைலிஷாக தோன்றியுள்ளார் என்கிறது படக்குழு. ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ்பாபு கூட்டணி முதல்முறையாக இணைந்துள்ளதால் தெலுங்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் இந்தப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.     

படத்தின் கதை குறித்த எந்த தகவலும் இதுவரை வெளிவராத நிலையில் நாளை டீசர் வெளியாகவுள்ளதால் படத்தின் கதை குறித்து தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். படத்தின் டீசர் அறிவிப்பு வெளிவந்தது முதல் மகேஷ்பாபு ரசிகர்கள் அதை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து ட்ரண்டாக்கி வருகின்றனர்.

ஸ்பைடர் படத்திற்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் விஜயுடன் கூட்டணி அமைப்பதாக பேசப்பட்டு வந்த நிலையில், இந்த செய்தி உறுதியாகியுள்ளது விஜய் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.