Anushka Shetty Kathanar
சினிமா

அனுஷ்காவின் முதல் மலையாள பட டிரெய்லர் வெளியீடு! | Anushka Shetty | Kathanar

மலையாளத்தில் `Philips and the Monkey Pen', `Jo and the Boy', `Home' போன்ற படங்கள் மூலம் கவனம் ஈர்த்த ரோஜின் தாமஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள `Kathanar – The Wild Sorcerer' படத்தின் மூலம் தான் மலையாள திரையுலகில் கால் பதிக்கிறார் அனுஷ்கா.

Johnson

தெலுங்கில் வெளியான `சூப்பர்' படம் மூலம் அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு, ஆகிய இரு மொழிகளில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் அனுஷ்கா. வருடத்திற்கு மூன்று படமாவது வெளியாகிக் கொண்டிருந்த அவரது பட எண்ணிக்கை 2015க்கு பிறகு குறைய ஆரம்பித்தது. 2020க்கு பிறகு இரண்டே படங்கள் தான் இவர் நடிப்பில் வெளியானது. இந்த சூழலில் அனுஷ்கா மலையாள சினிமாவில் அறிமுகமாகிறார்.

மலையாளத்தில் `Philips and the Monkey Pen', `Jo and the Boy', `Home' போன்ற படங்கள் மூலம் கவனம் ஈர்த்த ரோஜின் தாமஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள `Kathanar – The Wild Sorcerer' படத்தின் மூலம் தான் மலையாள திரையுலகில் கால் பதிக்கிறார் அனுஷ்கா. மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் ஜெயசூர்யாவும் இப்படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பிரபு தேவா, ஹரிஷ் உத்தமன், வினீத், தேவிகா சஞ்சய் மற்றும் நிதீஷ் பரத்வாஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

கடமட்டத்து கத்தனார் என்ற பூசாரி குறித்த மாய கதைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம்  அமானுஷ்யம் நிறைந்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.