தெலுங்கு சினிமாவின் ஹிட் ஜோடி, பிரபாஸ்- அனுஷ்கா. இருவருக்குமான சினிமா கெமிஸ்ட்ரி உணர்வுபூர்வமாக இருக்கும். ‘பாகுபலி’ உள்பட பல படங்களில் ஜோடியாக நடித்த இவர்கள் காதலித்து வருவதாக சில வருடங்களாக தகவல் பரவி வருகிறது. பாகுபலி-க்கு பிறகு இந்த தகவல் அதிகமாக சுற்றுகிறது. இருவருமே அவ்வப்போது, ‘நாங்க நண்பர்கள்தான்’ என்று கூறிவருகின்றனர். இந்நிலையில் அனுஷ்காவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
அனுஷ்காவுக்கு திருமண தோஷம் இருப்பதாக ஜோதிடர் கூறியதால், வட மாநிலங்களில் உள்ள கோயில்களுக்குச் சென்று, பூஜை செய்துவிட்டு வந்தார் அனுஷ்கா.
இந்நிலையில், அனுஷ்காவின் திருமணம் குறித்து அவரது அம்மா முதல்முறையாக பேட்டி அளித்துள்ளார்.
’எனக்கு பிரபாசை பிடிக்கும். அவரும், அனுஷ்காவும் சேர்ந்து நடித்துள்ளனர். என் மகள் அனுஷ்காவுக்கு பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சிதான். ஆனால் அவர்கள் இருவரும் நண்பர்கள் மட்டுமே. அவர்களுக்கு இடையே காதல் இல்லை. அதனால் அவர்களின் திருமணம் பற்றி வதந்தி பரப்புவதை நிறுத்துங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.