சினிமா

பிரபாஸுடன் கிசுகிசுத்தால் ஜெயில்தான்.. அனுஷ்கா அதிரடி!

பிரபாஸுடன் கிசுகிசுத்தால் ஜெயில்தான்.. அனுஷ்கா அதிரடி!

Rasus

பாகுபலியில் பிரபாஸுக்கும், அனுஷ்காவும் இடையே இருந்த கெமிஸ்ட்ரி அவர்களது நிஜவாழ்க்கையிலும் கொளுந்து விட்டு எரிந்து வருகிறது. இருவரும் காதலிக்கிறார்கள்.. கல்யாணம் செய்து கொள்ள போகிறார்கள். இவர்கள் காதலுக்கு பிரபாஸ் வீட்டில் எதிர்ப்பு என செய்திகளுக்கு விதவிதமாக சிறகுகள் முளைத்தாலும் இதுவரை வாய்திறக்காமல் இருந்து வந்தார்கள் சம்பந்தப்பட்ட இருவரும். இடையில் பிரபாஸுக்கு ராசி சிமெண்ட் நிறுவனரின் பேத்தியை திருமணம் செய்ய உள்ளதாகவும் இருவீட்டாரும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த அனுஷ்கா  எங்கள் இருவரையும் இணைத்து வதந்திகள் வருகின்றன. வதந்திகளைப் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தயாராகி விட்டேன். இனியும் வதந்தி பரப்பினால் அவர்கள் மீது வழக்குத் தொடர்வேன்’ என எச்சரித்துள்ளார் அனுஷ்கா.