சினிமா

'அந்நியன்' ரீமேக்: இயக்குநர் ஷங்கருக்கு தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் நோட்டீஸ்!

'அந்நியன்' ரீமேக்: இயக்குநர் ஷங்கருக்கு தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் நோட்டீஸ்!

webteam

இந்தி ரீமேக் அனுமதி விவகாரத்தில், இயக்குனர் ஷங்கருக்கு 'அந்நியன்' திரைப்படத்தின் தயாரிப்பாளர் 'ஆஸ்கார்' ரவிச்சந்திரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ரன்வீர் சிங் நடிப்பில் 'அந்நியன்' திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாகவும், அந்த திரைப்படத்தை 'பென் ஸ்டூடியோ' என்ற தயாரிக்கவிருப்பதாகவும் இயக்குநர் ஷங்கர் புதன்கிழமை அறிவித்தார்.

ஆனால், இந்தத் திரைப்படத்தை ரீமேக் செய்வதற்குரிய முறையான அனுமதியை பெறவில்லை என்று ஆஸ்கார் ரவிச்சந்திரன் வழக்கு தொடரவுள்ளார். இதற்காக இயக்குனர் ஷங்கர் மற்றும் அந்தத் திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் தயாரிப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அந்தப் படத்தின் அனைத்து மொழிக்கான உரிமையும் தன்னிடமே உள்ளது என்றும், அந்தக் கதையை சுஜாதாவிடம் 5 லட்சம் ரூபாய் கொடுத்து முறையாக பெற்றுள்ளேன் என்றும் ஆஸ்கார் ரவிச்சந்திரன் அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தகவலை ஆஸ்கார் ரவிச்சந்திரன் தரப்பு, நம்மிடம் தெரிவித்தது. அந்நியன் தயாரிப்பின்போது கையெழுத்தான ஒப்பந்த நகலையும் அந்த தரப்பு பகிர்ந்துள்ளது.