சினிமா

’அண்ணாத்த’: ரஜினி-நயன்தாராவுக்குமான ‘சாரக்காற்றே’ பாடல் நாளை வெளியீடு

’அண்ணாத்த’: ரஜினி-நயன்தாராவுக்குமான ‘சாரக்காற்றே’ பாடல் நாளை வெளியீடு

sharpana


ரஜினியின் ’அண்ணாத்த’படத்தின் இரண்டாம் பாடல் நாளை வெளியாகிறது.

'தர்பார்' படத்திற்கு பிறகு நடிகர் ரஜினி ’சிறுத்தை’ சிவா இயக்கத்தில் 'அண்ணாத்த' படத்தில் நடித்து முடித்துள்ளார். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 4-ஆம் தேதி படம் வெளியாகிறது.

மறைந்த பாடகர் எஸ்.பி.பி கடைசியாக பாடிய ‘அண்ணாத்த அண்ணாத்த’ பாடல் கடந்த 4 ஆம் தேதி வெளியான நிலையில், நாளை ரஜினிக்கும் நடிகை நயன்தாராவுக்குமான காதல் பாடலான ‘சாரக்காற்றே’ பாடல் நாளை வெளியாகிறது என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு. அதோடு, ரஜினி நயன்தாரா ஒன்றாக மயில் மீது அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்கள்.