தமிழ், தெலுங்கில் அதிக வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் அஞ்சலி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாளப் படத்தில் நடிக்கிறார். ’ரோசாப்பூ’ என்ற அந்தப் படத்தில் பிஜூ மேனன் ஹீரோ.
படத்தை இயக்கும் வினு ஜோசப் கூறும்போது, ‘இதில் ஹீரோவுக்கு இணையான கேரக்டர் ஹீரோயினுக்கு இருக்கிறது. அதனால் நன்றாக நடிக்கத் தெரிந்த ஒரு நடிகை வேண்டும் என்று நினைத்தோம். அஞ்சலி அதற்கு சரியாக பொருந்தினார். கதைப்படி அவர் பாதி தமிழ், பாதி கன்னடிகாவாக நடிக்கிறார். டார்க் காமெடி படமான இதில் சவ்பின் சாஹிர், திலீஷ் போத்தன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். அதோடு படத்தில் 143 கேரக்டர்கள் இருக்கின்றன. அனைத்துக் கேரக்டருக்கும் முக்கியத்துவம் இருக்கும். சும்மா வந்து போவது போல இருக்காது’ என்றார்.