சினிமா

அனிதாவின் மரணமும் அரசியலா? நடிகர் விஜய்சேதுபதி கேள்வி

அனிதாவின் மரணமும் அரசியலா? நடிகர் விஜய்சேதுபதி கேள்வி

webteam

மாணவி அனிதாவின் மரணமும் அரசியலா என நடிகர் விஜய்சேதுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

நீட் தேர்வு விவகாரத்தால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்திற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில்’இதுவும் அரசியலா? துயரத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. என் சகோதரி அனிதாவின் பெற்றோருக்கும் குடும்பத்திற்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்’எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல் நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி.பிரகாஷும் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், ‘கழிப்பறை கூட இல்லாத வீட்டில் மருத்துவ கனவோடு பிறந்த அனிதா இன்று இல்லை. நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவின் மரணம் அதிகாரமும் சட்டமும் சேர்ந்து செய்த படுகொலை’ எனத் தெரிவித்துள்ளார்.