சினிமா

அடுத்தடுத்து... அஜீத், விஜயை கவர்ந்த அனிருத்!

அடுத்தடுத்து... அஜீத், விஜயை கவர்ந்த அனிருத்!

webteam

விஜய் நடிக்கும் 62 வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார்.
கத்தி, துப்பாக்கி ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜயின் படத்தை மீண்டும் இயக்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்தப் படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்தப்டத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். தற்போது அவர் இசையமைத்துள்ள விவேகம் படத்தின் இசை விரைவில் வெளியாக இருக்கிறது. விஜயின் 62 வது படத்திற்கான பாடல்களின் இசைக்கோப்பிற்காக வரும் செப்டம்படம்பர் மாதம் அனிருத் அமெரிக்க செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் மெர்சல் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் பணிகள் முடிந்த பிறகு வரும் செப்டம்பரில் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.
ஏற்கெனவே அஜீத் நடித்த வேதாளம் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இரண்டாவது முறையாக அவர், அஜீத் நடிப்பில் வெளியாக இருக்கும் விவேகம் படத்திற்கு இசையமைத்துள்ளார். அதே போல் விஜயின் கத்தி படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்த நிலையில் மீண்டும் அவரது அடுத்த படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். இதன் மூலம் அஜீத், விஜயை கவர்ந்தவராகி இருக்கிறார் அனிருத்!