சினிமா

அனிருத் தரப்போகும் டு இன் ஒன் எமோஷன்

அனிருத் தரப்போகும் டு இன் ஒன் எமோஷன்

webteam

 ஒரே பாடலில் இரண்டு விதமான எமோஷன்களை கலந்து இசையமைத்துள்ளதாக இசையமைப்பாளர் அனிருத் ட்விட்டர் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்திருக்கிறார்.

சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் திரைப்படம் டிசம்பர் 22 தேதி வெளியாக உள்ளது. அதனையொட்டி அப்படக்குழு தொடர்ந்து பாடல்களை வெளியிட உள்ளது. வரும் நவம்பர் 2 ம்தேதி ‘இறைவா + உயிரே’ பாடலை வெளியிட உள்ளனர். இந்தப் பாடலில் இரு விதமான உணர்வுகளை உள்ளே கொண்டு வந்துள்ளதாக அனிருத் தெரிவித்துள்ளார். அத்துடன் ஏற்கெனவே வெளியான ‘கருத்தவன்லாம் கலீஜா’ பாடலை வெற்றிப் பாடலாக்கிய ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.

இன்று மாலை ஒரு சர்ப்ரைஸ் வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் விடையை அனிருத் வீடியோவில் தோன்றி அறிவித்திருக்கிறார்.