சினிமா

லண்டனில் முதன்முறையாக அனிருத் லைவ் ஷோ

லண்டனில் முதன்முறையாக அனிருத் லைவ் ஷோ

webteam

தமிழ்த் திரையிசை உலகின் இளம் இசையமைப்பாளரான அனிருத் முதன்முறையாக இலண்டனில் பிரம்மாண்டமான முறையில் இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார்.

ஜுன் 16 மற்றும் 17 ஆம் தேதியில் இலண்டன் மற்றும் பாரீஸில் பிரம்மாண்டமான முறையில் இசை நிகழ்ச்சியை இசையமைப்பாளர் அனிருத் முதன்முறையாக நடத்துகிறார். இதற்கான ஏற்பாடுகளை ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனமும், ஹியூபாக்ஸ் ஸ்டூடியோஸ் என்ற நிறுவனமும் இணைந்து செய்து வருகிறது. 

ஜுன் 16 ஆம் தேதியில் இலண்டனில் உள்ள எஸ்எஸ்இ வெப்லை அரேனா என்னுமிடத்தில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று முதல், இசை நிகழ்ச்சி நடைபெறும் கலையரங்கத்தின் இணையதளத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் பிரபல இணையதளங்களிலும் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. 

இசையமைப்பாளர் அனிருத் லண்டனில் முதன்முறையாக நடத்தும் இசை நிகழ்ச்சி இது. இந்த இசை நிகழ்ச்சி ஜிக் ஸ்டைல் சோ பாணியில் நடைபெறவிருக்கிறது. இந்திய இசைக்கலைஞர் ஒருவர் இதுபோன்ற வகையில் இங்கிலாந்தில் இசை நிகழ்ச்சி நடத்துவது இதுதான் முதன்முறை. இது இங்கிலாந்து மற்றும் வெளிநாடுகளிலுள்ள அனிருத் ரசிகர்களையும், லட்சக்கணக்கான இசை ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறது.

இதைத் தொடர்ந்து இசையமைப்பாளர் அனிருத் ஜுன் 17ஆம் தேதியன்று பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் ஸேனித் என்னுமிடத்தில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார். இங்கும் இதுவரை எந்தத் தமிழ் இசை கலைஞர்களின் இசை நிகழ்ச்சியும் நடைபெறவில்லை. இவர்தான் முதன்முறையாக இங்கு இசை நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்துகிறார். இதற்கான டிக்கெட் விற்பனை அடுத்த வாரம் முதல் தொடங்குகிறது.