சினிமா

‘இந்தியன்2’ படத்தில் இந்தி நடிகர் அனில்கபூர்? 

‘இந்தியன்2’ படத்தில் இந்தி நடிகர் அனில்கபூர்? 

webteam


‘இந்தியன்2’ திரைப்படத்தில் இந்தி நடிகர் அனில்கபூர் நடிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அஜய் தேவ்கன் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் அனில்கபூர் நடிப்பதாக தெரிகிறது.

‘எந்திரன்2’க்கு பிறகு இயக்குநர் சங்கர் இயக்கி வரும் திரைப்படம் ‘இந்தியன்2’. கமல்ஹாசன், காஜல் அகர்வால், பிரியா பவானிசங்கர், விவேக், ரகுல் பிரித்சிங் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ‘இந்தியன்2’வில் இந்தி நடிகர் அனில்கபூர் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது நடிகர் கமல்ஹாசனை அனில்கபூர் சந்தித்து பேசினார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவின. இதனையடுத்து ‘இந்தியன்2’ திரைப்படத்தில் அனில்கபூர் இணைந்துவிட்டதாக செய்திகள் பரவின. ஆனால் படக்குழு எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடாத நிலையில் அஜய் தேவ்கன் நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் அனில்கபூர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்தி நடிகரான அனில்கபூர் 1980ம் ஆண்டு தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடித்தார். அதற்குப் பின் அவர் தென் இந்தியா பக்கம் கவனம் செலுத்தவில்லை. முதல்வன் திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் சங்கருடன் இணைந்து அனில்கபூர் ஏற்கெனவே பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.