சினிமா

குணமடைந்தார் அனில் கபூர்

குணமடைந்தார் அனில் கபூர்

webteam

உடலில் ஏற்பட்ட காயத்தால் ஓய்வில் இருந்த அனில் கபூர், சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்.

நாற்பது ஆண்டுகளாக பாலிவுட் சினிமாவில் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்கியவர் அனில்கபூர். நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். அவரது குடும்பமே சினிமா வட்டாரத்தில் பிரபலம். சில மாதங்களுக்கு முன் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் அவர். அந்த சிகிச்சையில் குணம் பெற்று தற்சமயம் மீண்டும் நீச்சல் பயிற்சிக்கு திரும்பியுள்ளார். 
அந்தப் படங்களை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். எனக்கு அடிப்பட்ட பின் இன்றுதான் முதல்முறையாக வெளியே வந்துள்ளேன். எவ்வளவு விஷயங்களை கிரகிக்க முடிந்திருக்கிறது.  நான் நீச்சலை விரும்புகிறேன். நீச்சல் என்பது ஒரு தெரஃபி. மனதிற்கும் அது ஆன்மாவுக்குமான தெரஃபி என்று அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.