சினிமா

ஆண்களின் ஈகோ... ஆண்ட்ரியா கருத்து!

ஆண்களின் ஈகோ... ஆண்ட்ரியா கருத்து!

webteam

ராம் இயக்கத்தில் ஆண்ட்ரியா, வசந்த் ரவி நடித்துள்ள தரமணி படம் நேற்று ரிலீஸ் ஆகியுள்ளது. 

படம் பற்றி ஆண்ட்ரியா கூறும்போது, ‘ 'தரமணி' படத்தில் என் கேரக்டர் இவ்வளவு துணிச்சலாக இருக்கும் என முதலில் நினைக்கவில்லை. மக்களின் வரவேற்பையும் கருத்துகளையும் பார்க்கும்போது, நான் எதிர்பார்த்ததை விட துணிச்சலாக இந்த கேரக்டர் தோன்றுகிறது. எனது சொந்த உடல் மொழியையும் யதார்த்த நடிப்பையும் வெளிப்படுத்த ராம் முழு சுதந்திரம் கொடுத்தார். 'தரமணி' படத்துக்கு மனதளவில் நிறைய உழைப்பு தேவைப்பட்டது. எனது கலை திறமையையும் நேரத்தையும் மதிப்பவர்களோடு பணிபுரிவதே எனக்கு பிடிக்கும். ராம் இந்த இரண்டு அம்சங்களையும் மதிப்பவர். ஆண்களுக்கு எல்லாவிதத்திலும் சமமானவர்கள் பெண்கள் என்பது நிரூபணமாகி வரும் காலம் இது. ஆண்களைச் சார்ந்து வாழும் நிலை மாறி, பெண்கள் தங்களது அன்றாட தேவைகளைத் தாங்களே பூர்த்திசெய்துகொள்ளும் அளவிற்கு உயர்ந்துள்ளதால் ஆண்களின் ஈகோ பாதிக்கப்பட்டிருக்கிறது. எனது இந்த சொந்த கருத்துகளால்தான் 'தரமணி' படத்தின் கதை எனக்குப் பிடித்துள்ளது’ என்றார்.