சினிமா

‘இப்படி பண்ணாதீங்க கஷ்டமா இருக்கு’: சிம்பு ஃபீலிங்

‘இப்படி பண்ணாதீங்க கஷ்டமா இருக்கு’: சிம்பு ஃபீலிங்

webteam

‘இப்படி பண்ணாதீங்க கஷ்டமா இருக்கு’ என்று தனது ரசிகருக்கு சிம்பு அட்வைஸ் கொடுத்துள்ளார்.

சிம்புவுக்கு அதிகம் படங்கள் இல்லை. ஆனாலும் அவரது ரசிகர் எண்ணிக்கையில் எந்த ஏற்ற இறக்கமும் இல்லை. அவரது ஃபேன்ஸ் இன்னும் அதே அன்போடு அவரை பின் தொடர்கிறார்கள். அதற்கு காரணம், சிம்பு மனதில் பட்டதை ஒளிவு மறைவில்லாமல் போட்டு உடைப்பதுதான்.

சமீபத்தில் ரசிகர் ஒருவர் சிம்புவை சந்தித்துள்ளார். அதற்கான வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அதில் ரசிகர் தனது கையில் உள்ள ‘எஸ்டிஆர்’ என டாடூஸை சிம்புவிடம் மிக அன்பாக காட்டுகிறார். அதை பார்த்து சிம்பு, “அதெல்லாம் மனசுல இருந்தாலே போதும். இப்படியெல்லாம் பண்ணாதீங்க கஷ்டமா இருக்கு.” என்று தனது வேதனையை பகிர்ந்து கொள்கிறார். அன்பின் மிகுதியில் சிம்புவை கட்டியணைத்து முத்தமிடுகிறார் அந்த ரசிகர். அந்த வீடியோ தற்சமயம் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.