சினிமா

எமி ஜாக்சன் 2.ஓ பாடல் ஒத்திகை முடிந்தது

எமி ஜாக்சன் 2.ஓ பாடல் ஒத்திகை முடிந்தது

webteam

எமி ஜாக்சன் பங்கேற்கும் 2.ஓ பாடல் காட்சிக்கான ஒத்திகை இன்றுடன் முடிந்தது. 

லைகா தயாரிப்பில் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் 2.ஓ. இந்தப் படத்தின் மேக்கிங் வீடியோவை சமீபத்தில் வெளியிட்டிருந்தது படக்குழு. அதில் முழுக்க முழுக்க 3 டியில் தயாரிக்கப்படும் படம் இது என கூறியிருந்தார் இயக்குநர் ஷங்கர். ஆகவே அந்த அனுபவம் மிக புதியதாக அமையும் என்றும் வீடியோவில் விளக்கியிருந்தார். இதுவரை படத்தின் வசனக் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுள்ள நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் கிட்டத்தட்ட முடிவுக்கு வர உள்ளன. ஆனால் படத்தின் பாடல் காட்சிகள் மட்டும் படமாக்கப்படாமல் உள்ளன. பாடல் காட்சிகள் இதுவரை எந்தப் படத்திலும் இடம்பெறாத அளவுக்கு இருக்க வேண்டும் என இயக்குநர் ஷங்கர் டிசைன் செய்து வைத்துள்ளார். ரஜினி, எமி ஜாக்சன் பங்கேற்கும் ஒரு பாடல் காட்சிக்காக சில தினங்களாக ஒத்திகைப் பார்த்து வந்தனர். இன்றுடன் அந்த ஒத்திகை முடிவுக்கு வந்துள்ளது. நாளை முதல் இந்தப் பாடல் காட்சி சென்னை அருகே படமாக்கப்பட உள்ளது. இதற்காக ரஜினி இளமை தோற்றத்திற்கு திரும்பி உள்ளார்.