சினிமா

ட்விட்டரில் 32 மில்லியனை தொட்டார் அமிதாப் பச்சன்

ட்விட்டரில் 32 மில்லியனை தொட்டார் அமிதாப் பச்சன்

webteam

அமிதாப் பச்சனை 32 மில்லியன் பேர்கள் ட்விட்டர் கணக்கில் பின் தொடர்கிறார்கள்.

பாலிவுட் சினிமா உலகில் மூத்த நடிகராக வலம் வருபவர் அமிதாப் பச்சன். அவர் தற்சமயம் ஹிந்தி சினிமாவில் ஹீரோவாக நடிக்கவில்லை என்றாலும் அவர்தான் டாக் ஆப் த இந்தியன் சினிமாவாக இருக்கிறார். கதாநாயனாக இருந்த போது சம்பாதித்த புகழைவிட அவர் தற்சமயம் நடிக்கும் கேரக்டர் ரோல்களின் மூலம் பெரும் புகழை சம்பாத்து வருகிறார். ’பா’, ‘சமிதாப்’ என அவரது சினிமா கிராஃப் உச்சத்தில் உள்ளது. இதை தவிர அமிதாப்பை விளம்பரங்களில் நடிக்க வைக்க கடும் போட்டி நிலவுகிறது. 

இந்நிலையில் அமிதாப் பச்சனை ட்விட்டர் கணக்கில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 32 மில்லியனாக அதிகரித்துள்ளது. அதனை அடுத்து அவரது ரசிகர்கள் அவருக்கு ட்விட்டரில் வாழ்த்தை தெரிவித்து வருகிறார்கள். அமிதாப் இந்தக் கணக்கை தொடங்கியத்தில் இருந்து 60 ஆயிரம் ட்விட்கள் போட்டிருக்கிறார். அவர் 1,164 பேர்களை மட்டுமே பின் தொடர்ந்து வருகிறார். ஆனால் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 32 மில்லியன். அதாவது 3 கோடியே 20 லட்சம் பேர் அவரை பின் தொடர்கிறார்கள்.