டிவிட்டரில் 26 மில்லியன் ரசிகர்கள், பின் தொடர்வதை அடுத்து அவர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் அமிதாப்பச்சன்.
இந்தி சினிமா பிரபலங்கள் பலர், டிவிட்டர் தளத்தில் பிரத்யேக கணக்கு வைத்துள்ளனர். இதன் மூலம் தங்கள் திரைப்பட நிகழ்ச்சிகள், படப்பிடிப்புகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் கருத்துகளையும் அதில் வெளியிட்டு வருகின்றனர். இதையடுத்து அவர்களை ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். இந்தி சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனும் தனது கருத்தை டிவிட்டரில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இப்போது அவரை 26 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். இதை டிவிட்டரில் தெரிவித்துள்ள அமிதாப் பச்சன், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.