இந்திய அளவில் முதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் புதிய தொழில் நுட்பம் ஒன்று பயன்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிவகார்த்திகேயன் நடிக்கும் முதல் சயின்ஸ் ஃபிக்ஷன் படம் பற்றிய அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியானது. ஆகவே இந்தப் படம் அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கூட்டி இருக்கிறது. இதனை ‘நேற்று இன்று நாளை’ பட இயக்குநர் ரவிகுமார் இயக்குகிறார். ஆஸ்கர் நாயன் ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசையமைக்கிறார். நிரவ் ஷா இந்தப் படத்திற்கு சினிமாடோகிராஃபி செய்கிறார். முதன்முறையாக அவர் அலெக்ஸா எல்எஃப் எனும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி காட்சிகளை எடுக்க இருக்கிறார். இந்திய சினிமாவிலேயே முதன்முறையாக இந்தத் தொழில் நுட்பத்தை இவர்தான் பயன்படுத்த இருக்கிறார் என்பது ஹைலைட் நியூஸ். இது ஒரு ARRI's large format camera system. இதனை வைத்து மூன்று கோணங்களில் காட்சியை எளிமையாக வடிவமைக்க முடியும்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட நடிகர்கள் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.