சினிமா

போலி முகவரியில் பென்ஸ் கார் வாங்கினாரா அமலா பால்?

போலி முகவரியில் பென்ஸ் கார் வாங்கினாரா அமலா பால்?

webteam

நடிகை அமலா பால் தவறான முகவரிச் சான்றை அளித்து புதுச்சேரியில் பென்ஸ் சொகுசு காரைப் பதிவு செய்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.

மாத்ருபூமி என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், அமலா பால் அளித்துள்ள முகவரி ஒரு பொறியியல் கல்லூரி மாணவருடையது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த விநியோகஸ்தரிடம் பென்ஸ் காரை கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி வாங்கியுள்ளார். ஒரு கோடியே 12 லட்ச ரூபாய் விலை கொண்ட அந்தக் கார் புதுச்சேரி போக்குவரத்து அலுவலகத்தில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது. திலாஸ்பேட்டையின் செயின்ட் ரீரசா தெரு முகவரியில் கார் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த முகவரி போலி என செய்தியில் கூறப்பட்டுள்ளது.