சினிமா

'தம்' அடிக்கும் அமலாபால் - வைரலாகும் வீடியோ

'தம்' அடிக்கும் அமலாபால் - வைரலாகும் வீடியோ

webteam

நடிகை அமலா பால் புகைப்பிடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகையான அமலபால் தனது கணவருடன் திருமண உறவை முறித்து கொண்டு மீண்டும் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். 

இவர் தற்போது சுசி கணேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் திருட்டுப் பயலே 2 படத்தில் நடித்து வருகிறார். இவரது கவர்ச்சியான புகைப்படம் சமீபத்தில் வெளியாகி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருந்த நிலையில், தற்போது அமலாபால் புகைபிடிப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.