சுசி லீக்ஸ் இந்த பெயர் கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழ் திரையுலகத்தை ஆட்டி படைத்தது.
பாடகி சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து பல்வேறு தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் என வெளிவந்து தமிழ் திரையுலகத்தையே அதிர வைத்தது. இதில் நடிகை அமலாபால் வீடியோவும் வெளியிடப்போவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் யாரோ தனது ட்விட்டர் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக கூறி சுசித்ரா அந்த அக்கவுண்டை மூடினார். தற்போது இதுகுறித்து பேசியுள்ள அமலாபால், அந்த வீடியோவை காண தான் ஆவலாக இருந்ததாகவும், அது என்ன வீடியோ என்பதை காண காத்திருந்ததாகவும் கூறியுள்ளார்.