சினிமா

“சூர்யாவுடன் ஷூட்டிங் தொடங்கும் வரை காத்திருக்க முடியாது” டாப் கியரில் அல்லு

“சூர்யாவுடன் ஷூட்டிங் தொடங்கும் வரை காத்திருக்க முடியாது” டாப் கியரில் அல்லு

webteam

சூர்யா நடிக்க உள்ள திரைப்படத்தில் தெலுங்கு ஹீரோ அல்லு சிரிஷ் நடிக்க உள்ளார். அந்தப் பட வாய்ப்புக் குறித்து அவர் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

கே.வி.ஆனந்த் இயக்க உள்ள திரைப்படத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார். இது சூர்யாவின் 37வது திரைப்படம். ஏற்கெனவே ஆனந்த் இயக்கத்தில் ‘அயன்’, ‘மாற்றம்’ உள்ளிட்ட படங்களில் சூர்யா நடித்துள்ளார். இந்த முறை ஆனந்த் இயக்க உள்ள திரைப்படம் மிகப் பிரமாண்டமாக தயாராக உள்ளது. ‘லைகா புரொடக்‌ஷன்’ தயாரிக்க உள்ள இதில் மலையாள நடிகர் மோகன் லால் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்போது தெலுங்கு பட முன்னணி ஹீரோ அல்லு சிரிஷ் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது சம்பந்தமான செய்தியை ‘லைகா புரொடக்‌ஷன்’தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. கூடவே இயக்குநர் ஆனந்த்தும் இதனை ட்விட்டரில் உறுதி செய்துள்ளார். இந்தப் பட வாய்ப்புக் குறித்து அல்லு, “நான் ஏற்கெனவே சில தினங்கள் முன்பாக இயக்குநர் ஆனந்த் சாரை சந்தித்துவிட்டேன். அவரிடம் சில விஷயங்களை அறிந்து கொண்டேன். இந்தக் கதாப்பாத்திரத்திற்காக நான் முன்பே தயாராகிவிட்டேன். படப்பிடிப்பு தொடங்கும் வரை என்னால் பொறுத்திருக்க முடியாது” என்று கூறியுள்ளார்.

மேலும் “சூர்யாவின் படங்களை பற்றி நான் முன்பே என் பேட்டிகளில் நிறைய பேசி இருக்கிறேன். அவரது நடிப்பு எனக்குப் பிடிக்கும். சமூக வலைத்தளத்தில் இது குறித்து அவரது ரசிகர்கள் எழுதியிருக்கிறார்கள். என்னோடு அவர்கள் பேசி இருக்கிறார்கள். அவருடன் வேலை செய்ய இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த வாய்ப்பை வழங்கியமைக்காக அவர் இயக்குநருக்கு நன்றையையும் தெரித்து கொண்டிருக்கிறார்.