சினிமா

மரேடுமல்லி வனப்பகுதியில் தொடங்கும் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு

மரேடுமல்லி வனப்பகுதியில் தொடங்கும் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு

sharpana

அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ படத்தின் அடுத்தக்கப்பட்ட படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 2 தேதி முதல் தொடங்கவுள்ளது.

’அலா வைகுந்தபுரம் லோ’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன், பிரபல இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் ‘புஷ்பா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். செம்மரக்கட்டை கடத்தல் கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தில் கடத்தல்கார லாரி டிரைவராக அல்லு அர்ஜுன் நடிக்கிறார். ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்க தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். வில்லனாக மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் நடிக்கிறார் என்பதால் ’புஷ்பா’ படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

இரண்டு பாகங்களாக வெளியாகும் ’புஷ்பா’ படத்தின் முதல் பாகம் வரும் டிசம்பர் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது. இந்த நிலையில், புஷ்பா படத்தின் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மரேடுமல்லி வனப்பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.