ராஜமெளலியின் ’ஆர்ஆர்ஆர்’படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார் நடிகை ஆலியா பட்.
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் ராஜமௌலி இயக்கியுள்ள 'ஆர்ஆர்ஆர்' படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 13-ஆம் தேதி உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியாகிறது. 90 சதவீத படப்பிடிப்புகள் முடிந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கால் தடைப்பட்டது.
தற்போது அரசு அனுமதி அளித்துள்ளதால் ஆலியா பட் சம்பந்தப்பட்ட முக்கியமான காட்சிகளை ஹைதராபாத்தில் இயக்கி வருகிறது படக்குழு. இன்று நடக்கும் ஷூட்டிங்கில் கலந்துகொள்ளச் செல்லும் வீடியோ, மேக்கப் செய்துகொள்ளும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உற்சாகமுடன் பகிர்ந்திருக்கிறார், நடிகை ஆலியா பட்.