சண்டைக் காட்சியில் பங்கேற்ற இந்தி நடிகை அலியா பட் படுகாயமடைந்தார்.
பிரபல இந்தி பட இயக்குனர் மகேஷ் பட்டின் மகள் அலியா பட். இந்தி படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் இவர், இப்போது ’பிரமஸ்த்ரா’ என்ற படத்தில் நடித்துவருகிறார். இதில் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர் உட்பட பலர் நடிக்கின்றனர். அயன் முகர்ஜி இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் பல்கேரியாவில் நடந்து வருகிறது.
இதில் ஆக்ஷன் காட்சிகளில் அலியா பட் நடித்து வந்தார். அப்போது எதிர்பாரத விதமாக கீழே விழுந்ததில் அவரது வலது தோள் பட்டையிலும் கையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. படக்குழுவினர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிகிச்சை அளித்த டாக்டர்கள், சில வாரங்கள் ஓய்வெடுக்குமாறு கூறியுள்ளனர். இதனால் அவர் நடிக்காத காட்சிகள் இப்போது படமாக்கப்பட்டு வருகிறது.
‘அலியா பட் கடும் வலியில் அவதிப்பட்டு வருகிறார். அவரால் படப்பிடிப்பில் பங்கேற்க முடியாது. குளோசப் காட்சிகளில் மட்டுமே நடிக்க முடியும். 15 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறியிருப்பதால் அவரை மும்பைக்கு அனுப்ப முடிவு செய்துவருகிறோம்’ என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.