பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கும் நடிகை அலியா பட்டுக்கும் இந்தாண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ரன்பீர் கபூரும், அலியா பட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். ஆனால் எப்போது திருமணம் என்ற கேள்விக்கு இருவரும் மெளனமே பதிலாக அளித்து வந்த நிலையில், இப்போது இந்தாண்டு இறுதியில் திருமணம் நடைபெறவுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருவரும் இணைந்து நடிக்கும் படம் "பிரம்மாஸ்திர" இந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. இந்தப் படம் வெளி வந்த பின்பு அவர்களின் திருமணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.
ஏற்கெனவே இவர்களின் திருமணம், 2019-லேயே நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், புற்றுநோய்க்காக நியு யார்க்கில் ரன்பீரின் தந்தை ரிஷி கபூர் சிகிச்சை பெற்று வந்ததால் திருமண ஏற்பாடுகளை தள்ளி வைத்தனர்.