சினிமா

ஆளப்போறான் தமிழன்... வெளியானது பாடல் வரிகள் வீடியோ!

ஆளப்போறான் தமிழன்... வெளியானது பாடல் வரிகள் வீடியோ!

webteam

மெர்சல் படத்தின் சிங்கிள் ஆளப்போறான் தமிழன் பாடலின் சிங்கிள் ட்ராக் நேற்று வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்நிலையில் அந்தப்பாடலின் வரிகள் வீடியோவாக யுடியூபில் இன்று இரவு 7 மணிக்கு வெளியானது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஆளப்போறான் தமிழன் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதி உள்ளார்.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படத்தில் சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரையுலகில் அடியெடுத்து வைத்து நடிகர் விஜய்-யும், ஏ.ஆர்.ரஹ்மானும் 25 ஆண்டுகளை கடந்து விட்டனர். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு மெர்சல் 100-வது படைப்பு என்பதால் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 20 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.