சினிமா

பிரபுசாலமன் இயக்கத்தில் அக்‌ஷய்குமார்?

பிரபுசாலமன் இயக்கத்தில் அக்‌ஷய்குமார்?

Rasus

பிரபுசாலமன் இயக்கும் படத்தில் இந்தி நடிகர்கள் அக்‌ஷய்குமார் அல்லது சஞ்சய் தத் ஹீரோவாக நடிக்கப் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.

கண்ணோடு காண்பதெல்லாம், கிங், கொக்கி, லீ, மைனா, கும்கி, தொடரி உட்பட பல படங்களை இயக்கியவர் பிரபு சாலமன். இவர் தமிழ் மற்றும் இந்தியில் உருவாகும் படத்தை இப்போது இயக்குகிறார். இந்தப் படத்தை ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் ஹீரோவாக நடிக்க, இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் மற்றும் சஞ்சய் தத் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. இருவரில் ஒருவர் ஹீரோவாக நடிப்பார் என்று தெரிகிறது.

இதுபற்றி பிரபுசாலமன் தரப்பில் விசாரித்தபோது, ‘அக்‌ஷய்குமார் அல்லது சஞ்சய் தத் ஆகியோரில் ஒருவர் நடிப்பார்கள். இதுவும் காட்டை மையமாகக் கொண்ட கதைதான். இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு காடுகளில், வித்தியாசமான லொகேஷன்களில் படப்பிடிப்பு நடத்தப்பட இருக்கிறது. இப்போது அதற்கான வேலைகள் நடந்து வருகிறது’ என்று தெரிவித்தனர்.