அக்ஷய்குமார் நடித்துள்ள பேட்மேன் படத்துக்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.
அக்ஷய்குமார், சோனம் கபூர், ராதிகா ஆப்தே நடித்துள்ள படம், ’பேட்மேன்’. ஆர்.பால்கி இயக்கியுள்ளார். பெண்களுக்காக ஆரோக்கியமான நாப்கினை குறைந்த செலவில் தயாரித்த தமிழகத்தைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் என்பவரின் வாழ்க்கையை மையமாக கொண்ட இந்த படம், கடந்த 9-ம் தேதி வெளியானது. இந்தியாவில் வரவேற்பை பெற்றுள்ள இந்தப் படம் பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்டுள்ளது. படத்துக்கு சான்றிதழ் அளிக்க பாகிஸ்தான் சென்சார் போர்டு மறுத்துவிட்டது.
‘இது எங்கள் கலாசாரத்துக்கும் பண்பாட்டுக்கும் இந்தப் படம் எதிராக உள்ளதால் சென்சார் சான்றிதழ் கொடுக்க முடியாது’ என்று சென்சார் உறுப்பினர் இஷாக் அகமது கூறியுள்ளார்.